மட்டு பாலமீன்மடு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு….!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள  பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பஸ்தரிப்பு கட்டிடத்தில் சம்பவதினமான இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆண்ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர்  கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும் பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews