ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம்!

ஜப்பானிய அரசாங்க உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம் வழங்கப்மடவுள்ளது. இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று (10.08.2023) சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது.
வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிட்கி தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இந்த யூரியா உரமானது வரவிருக்கும் பருவமழையின் பயனாக ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவில் 150 விவசாய சேவை மையங்களால் இன்று முதல் வழங்கப்படும்.
வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் வாழும் விவசாயக் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறும்.
இந்த திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம் முன்மொழிந்த தொகை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் இலங்கை மற்றும் மாலைதீவின் பிரதிநிதி திரு.விமலேந்திர சரண் அவர்களும் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews