கட்டைகாடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு  பகுதியல் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் கம்பம் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டவர்கள்  உடனடியாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருதங்கேணி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த படுகாயமடைந்த நபரை மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளை அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணமடைந்த குறித்த நபர்
மன்னார் முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த. 22 வயதுடையவர் ஏனவும், வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரணமடைந்தவருடைய சடலம் தற்போது  பருத்தித்துறைஆதார  வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews