தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (07) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு தெரிவித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
சட்டமுறையற்ற போராட்டம் நடைபெற்றமை சம்பந்தமாக என தெரிவித்தே குறித்த அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews