நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா….!

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று 04/08/2023  பாடசாலை  அதிபர் குமாரவேலு கண்ணதாசன் தலமையில்  சிறப்பாக இடம் பெறறது.
முதல்  நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து விழா மண்டபம்  வரை அழைத்து செல்லப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம், வரவேற்ப்பு நடனம், ஆசியுரை வரவேற்புரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலமை உரையினை நிகழ்த்தியதை தொடர்ந்து  நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள்,  அயல் பாடசாலை அதிபர்கள், ஆகியோர் மாணவர்களுக்கு பரிசில்களை, சான்றிதழ்கள், பதக்கம், பணப்பரிசுகள் என்பவற்றை வழங்கிவைத்தனர்.
தொடர்ந்து சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் உரை, மாணவர்களின் பேச்சு பாட்டு, நடனம், கவிதை போன்ற கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இதில் பிரதம விருந்தினராக கணபதி அறக்கட்டளை நிறுவன பணிப்பாளர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிமனை தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி வளர்மதி அம்பிகை பாகன், ஆகியோரும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews