தேசிய கிரிக்கெட் அணிக்குள் தெரிவான மாணவிக்கு கௌரவிப்பு!

19 வயது பிரிவிற்குட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வு, நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுபுலம் இணைந்த கரங்கள் அமைப்பின் தலைவர் திரு இராசேந்திரன்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியின் 19 வயது பிரிவிற்குட்பட்பட் 30 பேர் அடங்கிய குழுவில் தெரிவு செய்யப்பட்ட சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவி செல்வராசா கிருஸ்ரிகாவிற்கான கௌரவிப்பினை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் வழங்கி வைத்தார்.
தொடர்ச்சியாக பாண்டவெட்டை காட்டுபுலம் கிராமத்தில் க.பொ.த சாதாரண தர சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் புலமைபரிசில் சித்திபெற்ற மாணவர்களுக்கும்  பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் , சுழிபுரம் விக்டோரியா கல்லூரி  அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் , கிராமசேவையாளர்கள் , அலைபாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் அருள் சிவானந்தன், நாங்கள் செயற்பாடு அமைப்பின் தலைவர் எஸ்.பிரதாப் , மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews