யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட கணனி ஆய்வுகூடம் திறந்த வைப்பு!

யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கல்விபயிலும் தாதிய மாணவர்களுக்கு, தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்பம் ஒரு பாடமாக இருந்த போதிலும்  அவர்களுக்கான கணினி ஆய்வுக்கூடம் ஒன்று இப் பாடசாலையில்  இல்லாமல் காணப்பட்டது.
இந்நிலையை நிவர்த்தி செய்யுமுகமாக  அவர்களுக்கான இணைய வசதியுடன்  கூடிய நவீன கணனி ஆய்வுகூடம் ஒன்று திரு . இராஜநாயகம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் ABAYAM Foundation நிறுவனத்தின் அனுசரணையில்  இன்றைய தினம் மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, நிதி அனுசரணையாளர்கள், தாதிய மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews