சாவகச்சேரியில் கடையடைத்து ஹர்தாலுக்கு பூரண ஆதரவு!

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி வேண்டும் என கோரி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் இன்றையதினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அந்தவகையில் ஹர்தாலுக்கு பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் ஆதரவினை வழங்குவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டமையை அவதானிக்க முடிகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews