இலங்கைக்கு பெருந்தொகை கடனுதவி வழங்க AIIB இணக்கம்

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்களுக்கு 220 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இணக்கம் தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றையதினம்(07.07.2023) இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவ AIIB இணக்கம் தெரிவித்ததாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இந்தியாவில் தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமான 130 MW சம்பூர் கிரவுண்ட் மவுண்ட் சோலார் பவர் பார்க் அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்திற்கான எரிசக்தி அனுமதி அடுத்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதே நேரத்தில் டிரான்ஸ்மிஷன் லைன்கள் மற்றும் அதன் திட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியை திரட்ட AIIB உடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews