மட்டு அரசடி சந்தி பிள்ளையார் ஆலயத்தில் திருடிய திருடன் 3 மாதத்தின் பின்னர் கைது

மட்டக்களப்பு நகர் அரசடி சந்தி பிள்ளையார் ஆலயம் மற்றும் வீடு உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட பொருட்களை திருடிவந்த ஏறாவூர் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞப் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 2 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி சனிக்கிழமை  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி சந்திப் பிள்ளையார் ஆலையத்தில் மடப்பள்ளி அறையில் வைக்கப்பட்டிருந்த குருக்கலின்; கையடக்க தொலைபேசி 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் திறப்பு கோர்வை கைப்பேசி  என்பவன திருட்டுப் போயுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிரி கமராவில் திருடன் பதிவாகியுள்ளதையடுத்து அவனை இனங்கண்டனர் இதனையடுத்து தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.எம்.எஸ். கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் சாஜன்களான கோகுலன், பிறேமதாஸ, வசந்து ஹகுமான், கொண்ட குழுவினர் மேற்கொண்டுவந்த விசாரணையில் ஏறாவூர் நீதிமன்ற வீதியிலுள்ள திருடனை கைது செய்துள்ளதுடன்  இரண்டு கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அரசடி சந்தி பிள்ளையர் ஆரவய திருட்டு மற்றும் இருதயபுரத்தில் வீடு ஒன்றில் கையடக்க தொலைபேசி திருட்டு, போதனா வைத்தியசாலையில் கையடக்க தொலைபேசி என்பன் திருடியுள்ளதாhகவும் ஏறாவூரில் பல திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும்  பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews