கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், தேசத்தின் கடமை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews