இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரே சட்டவிரோதமாக மணல் யாட் அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து  சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏம் ஏ சுமந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றவேளை சட்டவிரோதமான மணல் அகல்விளக்கு இடம் பெறுவதாகவும் அதனை பொலீஸார் கண்டுகொள்வதில்லை ஏனவும் மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வேலையே பாராளுமன்ற உறுபபினர் ஏம் ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் யாட் அமைத்து சட்டவிரோதமான  மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும், குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் இதனால் மக்கள் அவர் குறித்த தகவல்களை வழங்க அச்சப்படுவதாகவும் குறுப்பிட்டார்.
இதேவேளை சட்டவிரோதமான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு மருதங்கேணி, நாகர்கோவில், வல்லிபுரம், முள்ளிச்சந்தி ஆகிய நான்கு இடங்களிலும் போலீஸ் மற்றும் இராணுவ காவலரண்கள் இருக்கின்ற நிலையில் இது ஏவ்வாறு இடம் பெறுகிறது என கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி ஏழுப்பினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews