மட்டக்களப்பு சித்தாண்டியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை பெண் ஒருவர் கைது 40 லீற்றர் கசிப்பு மீட்பு.!

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்;தி நிலையம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை 14,000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்ததுடன் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதரிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதரிகாரி பி.எஸ்பி..பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்;பவதினமான நேற்று இரவு குறித்த பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்து வந்த வீட்டை முற்றுகையிட்டனர் .

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 14.000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews