பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் மீட்பு….!

காத்தான்குடியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். இதன்போது கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு  அதிகாரிகளினால் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பணை செய்யப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார். இந்த திடீர் சோதனை நடவடடிக்கை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஊறணி காத்தான்குடி, போன்ற பிரதேசங்களில் சீமெந்து, பல்மா, சீனி,  அரிசி போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பாக கண்டறியும் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்

இதன்போது காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சோதனையின் போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவைகள் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தமக்கு பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே  குறித்த வர்த்தக நிலையங்கள்தாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்

 

Recommended For You

About the Author: Editor Elukainews