யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது – பிரஜைகள் குழு செயலாளர் சி.ஜீவநாயம்

யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயம் தெரிவித்துள்ளார்.
ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 06.06.2023  இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் நாங்கள் இன்று கதைக்க வேண்டி உள்ளது. குறிப்பாக ஒளிபரப்பு மீதான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஊடக கருத்துக்களை மக்களிடம் சென்டஷறடைவதை தடுக்கும் யுக்தியாக காலம் காலமாக ஒவ்வொரு அரசுகளும் ஊடகங்ள் தொடர்பிலானதும், ஒளிபரப்புகள் தொடர்பான சட்டங்ளையும்  கொண்டுவந்துள்ளது.
அந்த வகையில் யுத்த காலத்திலும் கூட செய்தி தணிக்கைகளை, ஊடக தணிக்கைகளை அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்றது. அதன் ஊடாக இறுதி யுத்தத்திலும்சரி, யுத்த காலத்தில் ஏற்பட்ட மனித பேரவலங்கள் வெளியிலே ஊடகங்களிற்கு செல்லமுடியாத பேரவலம் காணப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் ஊடகங்கள்கூட அந்த செய்தி தணி்கையினால் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட செய்திகளை மாத்திரம் வெளியீடு செய்தது. ஆவே, யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித பேரவலங்கள் தொடர்பாகவோ அல்லது காவுகொள்ளப்பட்ட தமிழர்களது எண்ணி்க்கை  தொடர்பாகவோ இன்றுவரை விடைகாண முடியாத சூழல் காணப்படுகின்றது.
அந்த நிலைமை யுத்தகாலம் என்பதற்கு அப்பால், இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் அவ்சர அவசரமாக ஒளிபரப்பு அதிகார சபை சட்டத்தை மீள கொண்டு வருவதற்கு எத்தனிப்பதா நாங்கள் ஊடகங்கள் ஊடா அறிகின்றோம்.
குறிப்பாக ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் பண்புகளில் ஊடகங்கள் மிக முக்கியமானது. நாட்டில் சிறந்த ஆட்சியை வலியுறுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிக மு்கியமானதாக இருக்கின்றது. ஊடகங்ள் என்பது எப்பொழுதும் ஆட்சியாளர்களிற்கு சிம்மசொற்பனமாக இருக்கக்கூடிய கருவியாகக்கூட இரு்கின்றது.
அதனை மையப்படுத்தி இப்பொழுது ஒளிபரப்பு அதிகார சபைச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்றது. இந்த நாட்டினுடைய தற்பொழுது உள்ள ஆட்சி முறையில் பல்வேறுபட்ட அதிருப்திகளும், குறைபாடுகளும் நீதி தவறிய செயற்பாடுகளும் காணப்படுகின்றது. அதனால்தான் எல்லா துறைகளிலும் அரசுக்கு எதிரான எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றது,
அதனை கட்டுப்படுத்துவதற்கும், சமாளிப்பதற்கும் அரசாங்கம் சர்வாதிகார முறைகளை கையாளப் பார்க்கின்றது. அண்மையில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை கொண்டுவருவதற்கு இருந்தது. இவ்வாறு சட்டங்களை கொண்டுவருவதிலேயே  பாராளுமன்ற  காலத்தையும், ஜனாதிபதி காலத்தையும் கடத்தப்படுகின்றதா என்ற ஐயப்பாடும் இருக்கின்றது.
மறுபுறத்தில் நிலையான பொருளாதார நிலையை உருவாக்குவதற்கான சூழலையும், இந்த அரசாங்கம் ஏற்படுத்தாதுள்ளது. ஆனவே இந்த ஒளிபரப்பு அதிார சபை சட்டம் என்பது  ஊடகங்ளை  கட்டுப்படுத்துவதற்கும், அரசு தனக்கிருக்கின்ற எதிர்ப்பலைகளை கட்டுப்படுத்துவதற்குமாவே இந்த சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்றது.
அண்மையில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மிகவும் தெளிவான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில் மிக விரைவாக அப்பதவியிலிருந்த அவர் நீக்கப்பட்டிருந்தார். இலங்கையில் இப்பொழுதுள்ள நிலையில் அதிகார வெறிபிடித்த அரசாங்கமாக அதிாரத்தின் ஊடா எதையும் சாதிக்கின்ற அரசாங்கமாக காணப்படுகின்றது.
இந்த சட்டத்தை தனக்கு சாதகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்டு நிறைவேற்றுவதற்கான எத்தனிப்புகளை செய்கின்றது. எனவே இந்த சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பிரஜைகளாக எண்ணி தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews