இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.. |

இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்..
இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.1987ம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இறந்த பொது மக்களை நினைவு கூருவதில் கடந்த காலங்களில் அச்சமான சூழல் நிலவிவந்ததன் காரணமாக இன்றைய தினம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இளையகுட்டி பரஞ்சோதியின் தலைமையில் இறந்தவர்களின் உடைக்கப்பட்ட நினைவு தூபிக்கு அருகில் நினைவேந்தல் இடம்பெற்றது.

அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட தேரம் பிள்ளையார் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் பொதுச்சுடர் மற்றும் நினைவுச் சுடர் ஏற்றி கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews