இன்றைய போராட்டத்திற்கு முன்னணி அழைப்பு….!

தையிட்டியிலே மூன்றாவது கட்டமாக போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்றைய போராட்டத்திற்கு பொஷன்.  ஆகவே எமது எதிர்ப்பை வலுவாகவும் காத்திரமாகவும் வெளிக்காட்டவேண்டிய தேவை இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
போராட்டத்தில்  02.06.2023 கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெவிகையில்,
தமிழ் தேசத்தை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற அத்தனை தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இன்று காலை 9:00 மணிக்கு தையட்டி சட்ட விரோத கட்டுமானம் அமைந்திருக்கின்ற பகுதி விரைந்து வருமாறு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம்.
இது எங்களது சொந்த பூர்வீக மண், எமது போராட்டமானது ஒரு சட்ட ரீதியான போராட்டம். இங்கு அமைக்கப்பட்டு இருக்கின்ற கட்டுமானம்தான் சட்டத்திற்கு புறம்பானதே தவிர எமது போராட்டம் சட்டவிரோதமானது கிடையாது.
ஆகவே இந்த சட்ட ரீதியான போராட்டத்தை வலுப்படுத்துவது ஒவ்வொரு தமிழ் தேசிய பற்றாளர்களதும் வரலாற்று கடமையாகும். இந்தப் போராட்டத்தை நாங்கள் தவிர்ப்போமானால் எங்களது மண் பறிபோவதற்கு நாங்களே காரண கர்த்தா ஆகி விடுவோம்.
நாங்கள் தெரிந்தும் அந்த தவறை செய்யக்கூடாது. இன்று இந்த போராட்டத்தை தவிர்ப்போமேயானால் அம்பாறைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, திருகோணமலைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை ஏனைய பகுதிகளுக்கும் ஏற்பட்டுவிடும்.
எனவே நாங்கள் இதனை அனுமதிக்க கூடாது, அனுமதிக்கவும் முடியாது. தமிழர் தாயகம் எங்கும் எமது மண்ணுக்காக, உரிமைக்காக போராட்டம் செய்ய வேண்டியது தமிழ் மக்களுடைய கடமையாகும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews