எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக் குழுவினர் நேற்று (30.05.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இவர்கள் இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு ரீதியாக நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், உற்பத்தித் தொழில் புரட்சியை அடுத்த கட்டத்துக்கு முன்கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

சீனப் பொருளாதாரப் புரட்சி தொடர்பான முன்னோடிகளைக் கருத்தில் கொள்வது போல் பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய அமைதி மற்றும் நல்லிணக்கம் போலவே ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் சர்வதேச உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews