யாழில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் மரணம்….!

யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர், அவரின் வீட்டு வாசலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்னும் யாழ்.பொம்மை வெளியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சைக்கிளில் பால் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த முதியவர், வழமை போன்று பால் விற்பனை செய்துவிட்டு வீட்டு வாசலில் வந்து இறங்கி சைக்கிளைத் திருப்பிய வேளை அராலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.

அவர் உடனே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews