இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு(video)

இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து கார் பார்க்கிங்கில் மத்திய புலனாய் பிரிவு, கியூ பிரிவு பொலிசார், எஸ்.பி. தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவை சேர்ந்த பொலிசார் இன்று காலை முதல் கார் பார்க்கில் மர்மமான முறையில் நிற்கும்  ஆடி காரை எடுக்க  யாரேனும் வருவார்களா  என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் வெகு நேரமாகியும் காரைத் தேடி யாரும் வராததால் விரத்தி அடைந்த பொலிசார் மீட்பு வாகனத்தை வரவழைத்து ஆடி காரை அலேக்காக தூக்கி மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அங்கு காரை உடைத்து பார்த்தபோது கார் முழுவதும் இலங்கைக்கு கடத்துவதற்காக பொதி செய்யப்பட்டு சுமார் 158 கிலோ கஞ்சாகள் இருந்துள்ளது.
இதை அடுத்து பொலிசார் ஆடி காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்து கார் பார்க்கிங் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் ஆடி காரில் கடத்திவரப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மர்மமான முறையில் நின்று இருந்த ஆடி காரின் உள்ளே வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில் போலீசார் காரை உடைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கியதோடு, வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews