மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய சக ஆசிரியர் கைது!!

மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என சக ஆசிரியர்களை  கேட்டுக் கொண்ட ஆசிரியர் மீது  தாக்குல் மேற்கொண்ட சக ஆசிரியர் ஒருவரை நேற்று புதன்கிழமை (4) மாலை கைது செய்துள்ளதுடன் தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலைக்கு மட்டக்களப்பு ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபன் இடமாற்றம் பெற்று நேற்றைய தினமான செவ்வாய்க்கிழமை தனது கடமையை பெறுப்பேற்க வந்துள்ளமைய அறிந்த பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பாடசாலைக்கு சென்று அவர் கடமையேற்க முடியாது அவர் தொடர்பாக கல்வி திணைக்களத்தில் 40 முறைப்பாடுகள் இருப்பதுடன் அதிபர் இல்லாத வேளையில் காலையில் சென்று கையொப்பம் இட்டு கடமையை பெறுப் பேற்றுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை இங்கு கடமையாற்ற அனுமதிக்மாட்டோம் என தெரிவித்ததையடுத்து அங்கு ஆசிரியர் சங்க தலைவருக்கும் பாடசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் இடையே பெரும் குழப்பநிலை ஏற்பட்டது

இந்த நிலையில் பாடசாலை பகல் 1.30 மணிக்கு முடிவடைந்த போது ஆசிரியர் சங்க தலைவரை கடமை கையேட்டில் கையொப்பம் இடுவதற்கு அனுமதிக்காததையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை உருவாகிய சிலையில்  அவர் அங்கிருந்து வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை பாடசாலை அபிவிருத்திகுழுவைச் சேர்ந்த 10 பேர்  கடமையாற்ற அனுமதிக்காது தடுத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சம்பவதினமான நேற்று காலை 7 மணிக்கு பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பாடசாலைக்கு முன்னால் ஒன்றிணைந்து கூடிநின்று கடமையேற்கவரும் ஆசிரியர் சங்க தலைவரை பாடசாலைக்குள் அனுமதிக்க விடாது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க காத்திருந்தனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியர்களிடம் ஆசிரியர் சங்க தலைவரை கடமையேற்ற விடவேண்டாம் என கோரியதையடுத்து அவர் மீது திடீரென சக ஆசிரியர் ஒருவர் தாக்குதலை தாக்குதலை மேற்கொண்டுள்ளதையடுத்து அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு தெரிவித்துவிட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த நிலையில் அவரை கைது செய்துள்ளதாகவும் இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews