திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை தி/புனித மரியாள் கல்லூரியில் திறந்து வைப்பு….!

வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊடாக தேவ் – லலிதா மகாதேவன் (அவுஸ்திரேலியா) அவர்கள் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தால் திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை தி/புனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பசுமை வகுப்பறை என்பது நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும்.  இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகும், மேலும் சுற்றுச் சூழலை மதிக்கும் வகையில் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் கற்றுக்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக தி/புனித மரியாள் கல்லூரியின் 5B வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டது.
இன்றைய இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் திரு. T. ரவி, சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி நிரோஷா, லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர் Rev.Dr. Thierry J.Robouam, S.J , வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊழியர் திரு.கணேஷ், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிஹரன், பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. மைதிலி சேகரன் , Trinco Aid சார்பில் நிறுவனர் திரு. இராஜக்கோன் ஹரிஹரன், நிகழ்ச்சி முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் , திட்ட ஆலோசகர் திரு. அனோஜன் , வகுப்பு ஆசிரியை திருமதி. மயூரி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரூம் கலந்து கொண்டனர்.
Trinco Aid இன் நிகழ்ச்சி முகாமையாளர் திரு.சங்கரலிங்கம் நவநீதன் அவர்களால், பசுமை வகுப்பறைக்கான நினைவுச்சின்னம் வலயக்கல்வி பணிப்பாளர், மற்றும் விருந்தினர்கள் ஊடாக அதிபர், வகுப்பு ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு அதில் திருகோணமலை நகரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாகவும், பசுமை வளாகங்கள் அமைப்பது தொடர்பாகவும், பாடசாலை மாணவர்களை கொண்டு சிறந்த செயல்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews