அம்பாறை தமணவில் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சாஜன் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது!

அம்பாறை  தமண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழுவின் புலன்விசாரணை அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (3) மாலை வரிப்பொத்தான்சேனை பிரதேசத்தில் வைத்து  கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கிற்கு சாதகமாக செயற்படுவதற்கு 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பொலிஸ் சாஜன்  கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்று மாலை வரிபொத்தான்சேனை பிரதேசத்தில்  உள்ள இடம் ஒன்றில் மாறு வேடத்தில் இலஞ்ச ஊழல் ஈணைக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற பொலிஸ் சாஜன் இலஞ்சமாக குறித்த நபரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றபோது அவரை அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews