மின்னல் ஏற்படும்போது அவதானமாக செயற்படுங்கள்! அனர்த்த முகாமைத்துவ பிரிவு

மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்,சூரியராஜ் தெரிவித்தார்

தற்போதுள்ள காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடந்த  தினங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 22 குடும்பங்களை சேர்ந்த 79 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

இதில் குறிப்பாக சாவகச்சேரி மருதங்கணி ஊர்காவற் துறை கோப்பாய் பிரதேச பிரிவுகளில் பெரும்பாலான பாதிப்புகள் உணரப்பட்டுள்ளன

இதில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது

மேலும் மருதங்கணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் ஒரு பாடசாலையும்பகுதியளவில்  சேதமடைந்துள்ளது

அத்தோடு ஊர்காவற்துறை பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் காரணமாக ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடுகளில் காணப் பட்ட மின் உபகரணங்கள் பாதிப்பு அடைந்துள்ளன அத்தோடு கோப்பாயு பிரதேசத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஒரு வீட்டில் இருந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

இந்த காலநிலை  ஒரு வாரமாக தொடருமென எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்

குறிப்பாக மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் குறிப்பாக மின்னல் தாக்கங்கள் ஏற்படும் நேரங்களில் மின் உபகரணங்கள் தொலைபேசிகள் பாவனையை கட்டுப்படுத்துவது மிகவும் சால சிறந்தது என்றார்,

Recommended For You

About the Author: admin