சாணக்கியன் வரலாறு தெரியாது சிங்கத்துக்கு புலி வேசம் கொடுத் அமைச்சர் மக்களை ஏமாற்ற வேண்டாம் – சுரேஸ்

தமிழ் தேசியத்துக்காக போராடுகின்ற தமிழ் தேசியவாதிகள் மீது கரிசனை கொள்ளாது மாறா போலி தேசியம் பேசுகின்ற சிங்கத்தை பார்த்து புலி என தெரிவித்த அமைச்சருக்கு நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் வரலாறு தெரியாது எனவே அவரின்  வரலாற்றை அறிந்துவிட்டு கூறியிருக்க வேண்டும் மாறாக சிங்கத்துக்கு எல்லாம் புலி வேசம் கொடுத்து இந்த மக்களை ஏமாற்ற வேண்டாம் என்பதுடன் அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் 18 ஆண்டு நினைதின அஞ்சலி செலுத்தும் நினைவேந்தலில் கலந்துகொண்ட தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையில் ஈவ்வாறு தெரிவித்தார். இலங்கையை பெறுத்தளவில் 75 வருடங்களுக்கு மேலாக சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு முரண்பாடு காணப்படுகின்றது அந்த பிரச்சனை தொடர்பாக தமிழ் மபக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே ஆட்சியாளர்கள் மேற்கொள்ளுகின்ற அந்த கொடூரமான இனழிப்பு தொடர்பாக அன்றைய கால கட்டத்தில் மாமனிதர் சிவராம் மாமானிதர் சிவராம் உண்மையை உலகத்துக்கு ஊடகத்துறையினால் தெரியப்படுத்தி ஆற்றிய பணி மிக முக்கியமானது. இவ்வாறு உண்மையை வெளிப்படுத்திவந்த தென் தமிழீழத்திலே  அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக ஊடகவியலாளர் க.தேவராசா கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் 1985-12-25 ம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் நடேசன் .த.சிவராம், சுகிர்தராஜன். இரட்ணசிங்கம் உட்பட 5 பேருடன் 36 தமிழர்கள் 2 முஸ்லீம் 8 சிங்களவர்கள் உட்பட 46 ஊடகவியலாளர்கள் நடந்த உண்மை சம்பவங்களை எழுத்துமூலம் உலகத்துக்கு தெரியப்படுத்தியதன் வாயிலாக அவர்களுக்கு கிடைத்த தண்டனை மரணதண்டனை இந்த மரணத்துக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.. சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம் இந்த நாட்டிலே நடைபெற்றிருந்தால் இவ்வாறனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் ஒரு ஊடக போரளி என்பவன் தனது நலனையும் பாராது இந்த உண்மையை உலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றான். அந்த அடிப்படையில் சிவராம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்%A

Recommended For You

About the Author: Editor Elukainews