12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொிவித்திருக்கின்றார். 

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுப்பதற்கு ஆலோசித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஏற்கனவே பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள்

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 2 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 12 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews