கைப்பேசி, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 623 பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய தீர்மானம்.

தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள், உதிரிப்பாகங்கள், வளிசீராக்கல் இயந்திரம், சொக்லேட், ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மோல்ட், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற 623 பொருட்கள் அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.அதிகப்படியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி சந்தையின் உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews