யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!

இன்றையதினம்யாழ்ப்பாணத்தவர்களுக்காக, 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு கல்வி நிலையமும் இயங்கி வருகின்றது.

அந்த ஐந்து கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விசேட சுற்றுலா பயணமானது சூரியா அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (19) ஆரம்பமானது. இந்த பயணம் நான்கு நாட்கள் கொண்டவை.

இவ்வாறு கொழும்புக்கு பயணமான மாணவர்களின் ஆன்மீக நலன் கருதி இன்றையதினம் கொழும்பில் உள்ள, மூந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதர் சமேத கருணாட்சி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த சுற்றுப்பயணமானது, சூரியா அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் திரு தேவராஜா பிரேமராஜா அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews