பிரான்ஸ், ஜேர்மன், சுவிட்சர்லாந்திற்கு பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமனம் –

பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும், வரலாற்றில் முதன் முறையாகவும் பிரான்ஸ், ஜேரமன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலைமையில் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பதிராஜ மற்றும் விநியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ள டியூக் இளங்கோ, அருமைத்துரை சிவராவூரன் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம மற்றும் தூதரக அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews