இலங்கை மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!

நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான, விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரவுக் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் நலன்புரி உதவிகள் பெறத் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நலன்புரி திட்டத்திற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தகவல் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews