இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்…!

இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்-
– மேலும் 39 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே உள்ள சிறையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 41 கைதிகள் உடல் கருகி மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள குறித்த தங்கெராங் (Tangerang) சிறையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பெரும்பாலான கைதிகளும், கொலை, பயங்கராவத குற்றச்சாட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்-

இத்தீ விபத்து சிறையிலுள்ள கட்டடத் தொகுதியொன்றில் (Block C) அதிகாலை வேளையில் ஏற்பட்டுள்ளதோடு, இச்சந்தர்ப்பத்தில் கைதிகள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து நேரிட்ட குறித்த கட்டடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதோடு, அதில் சுமார் 40 பேருக்கான இடவசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்-

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்துள்னர்.

ஆயினும் இத்தீ விபத்தில் சிக்கி, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கைதிகள் உள்ளிட்ட 41 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷிய சிறையில் தீ விபத்து; 41 கைதிகள் தீக்கிரையாகினர்-

குறித்த கட்டடத்தில் பல சிறைக் கூடங்கள் காணப்பட்டுள்ளது, தீ விபத்து ஏற்பட்ட போது கூடங்கள் மூடப்பட்டிருந்ததால் கைதிகளால் அங்கிருந்து தப்ப முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்கசிவால் இத்திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சிறையில் உள்ள அனைத்து கட்டடங்களில் மொத்தமாக 600 கைதிகள் மாத்திரமே வைக்க முடியுமென தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் சுமார் 2,000 கைதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 41 பேர் வரை இறந்திருக்கலாம் எனவும், 39 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

தீ விபத்து தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews