பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் கவலை

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்த புதிய சட்டம் 1987ல் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடக் கொடூரமானது. நடைமுறைச் சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்ட ஒருவரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும். எனினும் புதிய சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க முடியும்.
பாதிப்பில்லாத செயல் என இந்த யோசனைக்கு வாக்களிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தேசத்தையும் மக்களையும் நேசிக்காத ஒருவராகவே முத்திரை குத்தப்படுவார். ஒரு நாட்டில் இது போன்ற சட்டங்கள் வரும்போது பயங்கரவாதத்திற்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை உள்ளது. என்ற போதும் இந்த யோசனையில் சில பாதிப்பில்லாத செயல்களும் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews