முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களம், மாவட்ட செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்புக்கள் மற்றும் கடற்றொழில்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த மைதானப் புனரமைப்பு மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கான பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் பளை, கரந்தாய் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் சாத்தியமானளவு தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தார்
இதேவேளை  கிளிநொச்சி மாவட்ட சிறுபோக பயிர்ச் செய்கைக்கு இரணைமடு குளத்தின் நீர் பங்கிடப்பட்டமை  தொடர்பான மீளாய்வுக் கூட்டம்  ஒன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews