அரசியல்துறை மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்! |

தமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் பருத்தித்துறையில் இன்று காலமானார்.

பருத்தித்துறையில் 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறையில், மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நடைபெற்ற அனைத்து பேச்சுக்களின் போதும், பிரதான மொழிபெயர்ப்பாளராக அவர் செயற்பட்டிருந்தார்.

இறுதிப்போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர், 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பருத்தித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews