மட்டக்களப்பில் இந்து மதத்தை இழிவு படுத்துவததை கண்டித்து இந்து குருமார் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து மதத்தையும் தெயவங்களையும் சமூகவலை தளங்கள் ஊடாக இழிவுபடுத்துவதை கண்;டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை( 21) இந்து குருமார்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றயத்தின் தலைவர் கணேசா லோகநாதகுருக்கள் தலைமையிலான இந்து குருமார் காந்திபூங்கால் ஒன்றிணைந்தனர். இதன் போது மத ஒற்றுமையை சீர்குலைக்காதே, எந்த மத கடவுள்களையும் அவமதிக்காதே, எமது வழிபாட்டு தெய்வங்ளையும் இழிவுபடுத்திய மத போதகருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்,

கட்டாய மதமாற்றத்தை தடைசெய், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஓம், ஓம்,ஓம் என்ற மந்திரம் செய்தவாறு ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

அண்மைகாலமாக சமூகவலைத்தளங்களிலும் சுவரெட்டிகளிலாலும் இந்து மதத்தையும் கடவுள்களையும் சில கிறிஸ்தவ பேதகர்கள் இழிவு படுத்திவருவதுடன்  கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

இந்த நாட்டிலே மதசுதந்திரம் இருந்தாலும் கூட பிற மதத்தை தூசிப்பதே இழிவு படுத்திவதையே அன்றி தங்களுடைய மதத்தை வளர்த்தெடுப்பதிலே யாரும் குறுக்கிட முடியாது . இருந்தாலும் நாங்கள் பிற மத கடவுள்களை துசிப்பதே  தகாதவார்த்தை பிரயோகித்து நாங்கள் இதுவரை காலமும் எமது சைவசமயத்தை இதுவரையும் முன்னெடுத்ததில்லை

இருந்தபோதும் மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் அன்னியேஉன்னியமாக வாழ்ந்து வருகின்றனர். மத அக்கியத்தையும் நல்ல உறவையும்  சீர்குழைப்பதற்கு எமது மதத்தையும் எமது தெய்வங்களை எல்லாம் தகாதவார்த்தை பிரயோகத்தினை மத போதகர்கள் என்கின்ற அந்த பேர்வையிலே எமது மக்களின் மனங்களை சுக்கு நூறாக உடைத்து அவர்களை வேதனைப்படுத்தி மதங்களுக்கிடையே இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் முகமாக அண்மை காலமாக பல்வேறு வழிகளிலே மிக மோசமான முறையிலே துஷ;ரர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதனை கிழக்கிலங்கை இந்து குருமார் சம்மேளனர் வன்மையாக கண்டிக்கின்றது

நாங்கள் எவரையும் சீண்டுபவர்கள் அல்ல எமது மதத்தை யார் இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்போம். மத சுதந்திரம் அனைவருக்கும் சமமான ஒன்றாக இருக்கின்றது ஆனால் பிற மதத்தை தூசிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை எந்த மதத்திலும் கூறப்படவில்லை எனவே காவல்துறை எமது மதத்தை இழிவுபடுத்திய அந்த போதகருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews