இந்தியா என்றைக்கும் இலங்கையை கைவிடாது: வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையை எந்தக் கட்டத்திலும் இந்தியா கைவிடாது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், “தண்ணீரை விட இரத்தம் கனமானது” என்பதைப் போன்று இந்தியா தற்போதைய இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்பது இயற்கையானது என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

தண்ணீரை விட இரத்தம் தடிமனானது. இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்க என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் இந்தியா அக்கறை கொள்வது இயற்கையானது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நேரத்தில், இந்தியா தனது “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை கொள்கை”யைப் பின்பற்றி தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் துணை நிற்கிறது.

இந்தியா, அதன் ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ கொள்கையின் கீழ், கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ எப்போதும் முன்வந்துள்ளது, மேலும் சமீபத்திய நிகழ்வாக, புதுடெல்லியும் மார்ச் 16 அன்று கல்முனையில் உலர் உணவு விநியோகத்தை செய்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை புது டெல்லியில் The Exhibition Sri Lanka Architect ‘Geoffrey Bawa’ கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையைப் பற்றி நினைக்கும் போது, ​​ஜெஃப்ரி பாவா என் நினைவுக்கு வரும். இந்த கண்காட்சி இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான உறவை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றும் ஜெய்சங்கர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews