மட்டக்களப்பில் மீனவரின் படகிற்கு தீ வைத்த விசமிகள் – விசாரணை ஆரம்பம்.

மட்டக்களப்பு – பெரிய உப்போடை, லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் மீனவரொருவரின் படகிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான படகு, வலை என்பன தீயில் முற்றாக கருகியுள்ளதாக தெரியவருகிறது.

இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் வருகை தந்த போதே தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

மட்டக்ளப்பு – நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு அடையாளம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews