இன்று 3,644 பேருக்குக் கொரோனாத் தொற்று…!

நாட்டில் இன்று 3 ஆயிரத்து 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 401 ஆக எகிறியுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,998 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 80 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews