புளியம்பொக்கணை வண்ணத்தியாறு பகுதியில் காட்டு யானைகளினால் தோட்டச் செய்கை மற்றும் தென்னை செய்கை அழிப்பு…!

புளியம்பொக்கணை வண்ணத்தியாறு பகுதியில் காட்டு யானைகளினால் தோட்டச் செய்கை மற்றும் தென்னை செய்கை அழிவடைந்துள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் உள்ள வண்ணாத்தியாறு பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக மூன்று காட்டு யானைகள் தோட்ட பயிற்செய்கை மற்றும் தென்னைச்செய்கை  என்பவற்றை அழித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைகளில் இருந்து எம்மையும் எமது வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுவதற்கு எவரும் முன்வரவில்லை எனவும், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தெரிவித்த போதிலும் உடன் சம்பவயிடத்திற்கு வருவதாக கூறிவிட்டு, பின்னர் தொலைபோசியினையும் துண்டித்துவிட்டதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்ப்படுத்திய போதிலும் எந்த பயனுமற்று போயுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் இரவு 1.30 மணியளவில் குறித்த பகுதியில் ஒன்றரை ஏக்கர் அளவில்  தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. மூன்று நான்கு வருடம் கடந்த நிலையில் உள்ள 22 தென்னை மரங்களை முற்று முழுதாக அழித்ததுடன், சோழப் பயிற்சியை மேற்கொள்ளப்பட்டிருந்த பகுதிகளிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் அப்பகுதியில் இருந்து அதிகாலையில் தமது உற்பத்திகளை சந்தை பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி ஊடாக சுண்டிக்குளம் கடற்கரைக்கு நாளாந்த மீன் கொள்வனவுக்காக செல்லும் வியாபாரிகளும் காட்டு யானைகளின் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள்  வேண்டுகோளாக உள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews