ரூபாவின் மதிப்பு மீண்டும் அபாயத்தில்

முக்கிய பொருளாதாரக் கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை ரூபாய் அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபர கல்விப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

டொலரின் மதிப்பு வீழ்ச்சியும் ரூபாவின் பெறுமதி உயர்வும் அரசாங்கத்தின் குறுகிய காலத்திட்டம். எனினும் இவ்வருட இறுதிக்குள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை முன்னறிவிப்பதாகவும் பேராசிரியர் வசந்த அத்துக்கோரல கூறுகிறார்.

கடந்த நாட்களில் திடீரென உயர்வடைந்த ரூபாவின் மதிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பொருளாதார ஆய்வின் அடிப்படையில் இது ரூபாவை வலுப்படுத்துவது அல்ல, மாறாக ரூபாவை செயற்கையாக வலுப்படுத்துவது.

இவ்வாறான நிலையில், நீண்ட கால நோக்கில் ஏற்றுமதியை ஊக்கமளிப்பதினால் நாட்டிற்குள் வரும் டொலர்களின் அளவு குறைவதோடு, இறக்குமதியாளர்களின் ஊக்கத்தினால் நாட்டை விட்டு வெளியேறும் டொலரின் அளவு அதிகரிக்கலாம்.

வெளிநாட்டவர் ஒரு டொலரை மாற்றும்போது 370 ரூபாவுக்கு கிடைக்கும். ஆனால் இன்று ஒரு டொலருக்கு ஏறக்குறைய முந்நூற்று பத்து ரூபா கிடைப்பதே அதற்கு காரணம்.

இதனுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என்றால் அதிக வாழ்க்கைச் செலவை கொண்ட நாடாக சர்வதேச அளவில் தன்னைக் காட்டிக் கொள்ளும் திறன் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவது ஒரு உத்தரவாதம் மட்டுமே. வெளிநாடுகளில் கடன் வாங்குவதற்கான வழியை திறந்து விடுங்கள். நாடுகளிடமிருந்து கடன் பெற முடியும்.

16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றி இலங்கை கடன் பெற்றுள்ளது. உலகில் கடன் செலுத்தாத நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கிறது.

இந்த முறை சர்வதேச நாணய நிதியம் இந்தக் கடனை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தாலும், 2.9 பில்லியன் டொலர் கடனில் மீண்டும் கடனாளியாக மாற வாய்ப்புகள் உள்ளது.

கடன் வாங்கி மட்டுமே வளர்ச்சி அடைந்த நாடு உலகில் இல்லை. கடன் பெறும் வழிகளில் தங்கி இருக்காமல் டொலர்களை சம்பாதித்து கடனை அடைப்பதற்கான திட்டங்களை தயாரிப்பதே இலங்கை இப்போது செய்ய வேண்டும்.

அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் பொருளாக பொருளாதாரத்தை மாற்ற வேண்டும்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews