யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்,

யாழ். மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அவரை வினவிய நிலைையில், அது குறித்து கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்வர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக மாநகர சபையில்  மக்கள் எமக்கு பெரும்பான்மையினை  வழங்க தவறி விட்டார்கள் அதைவிட எதிர்வரும் காலத்தில்  யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர  சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என  நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசு கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும்  இடமில்லை மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள் ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது.

எதிர் காலத்தில் மாநகர சபையினை  தமிழரசு கட்சி கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை. மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது  விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை  கேட்பதற்கு நாம் தயார் இல்லை.

ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர். அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் ஆளுமை மிக்கவர் அவ்வாறான ஒருவரைத்தான் இம்முறை  எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.

அது மாத்திரமல்ல  கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசு கட்சி முதல்வர்  வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.

எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட முதல்வர் ஆனோல்ட்அவர்கள் தமிழீக விடுதலைப் புலிகளின் காலத்தில் பொங்கு தமிழ் நிகழ்வினை யாழ் மாவட்டத்தில் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் நடாத்தி தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்த   மொழி ஆற்றல் உள்ளவரே மாநகர சபை முதல்வர்பதவிக்கு தகுதி உள்ளவர் என்ற ரீதியிலே  கட்சி தெரிவு செய்தது.

அதேபோல அவர்  பல்கலைக்கழகபட்டதாரி ஒரு முதல்வரானவர் படித்தவராகவும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் கட்சி இமானுவேல் ஆனோல்ட் அவர்களை கடந்த காலங்களில் முதல்வராக தேர்வு செய்திருந்தது

எதிர்வரும் காலங்களில் மக்கள் எமக்கு பூரண ஆணை வழங்குமிடத்து  சபையினை திறம்பட செயற்படுத்துவோம் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews