சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச மகளிர் தினம்…..!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச மகளிர் தினம் இன்று சிறப்பாக இடம் பெற்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தி.வரதராசன் தலமையில்  இடம் பெற்ற இந்  நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு பிரதம, சிறப்பு, கௌரவ,  விருந்தினர்களால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டு வரவேற்ப்பு நடனம், வரவேற்புரை, தலமை உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து சிறப்புரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினர்களான  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை வரிவுரையாளர் திருமதி ஜஸ்மியா குகதாஸன்,  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர்  ஈ.தயாரூபன், சிறப்பு விருந்தினர்களான உதவி பிரதேச செயலர் திருமதி சிவகாமி உமாகாந்தன், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரஞ்சினி ரகுநாதன், கிராம அபிவிருத்தி திணைக்கள நிர்வாக கிராம அலுவலர் திருமதி சுமதி சிவகுமார், கௌரவ விருந்தினர்களான கரவெட்டி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.ரவிகரன், இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி பிரதே தலைவர் சி.ரகுபரன், ஆகியோர் உரை நிகழத்தினர்.
தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளை நிதி பங்களிப்பில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பபட்துடன் திருமதி ஜெயபாரதி குழுவினருடையநவயலின் இசை கச்சேரியிம் இடம் பெற்றது.
இதில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள், மாணவர்கள் மக்கள்  என பலரும் கலந்து  கொண்டனர். 

Recommended For You

About the Author: Editor Elukainews