நாட்டில் பொது இடத்தில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது!

பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடிவந்த நிலையில் அவ்வாறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீ​ழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 24 வயதான பெண் ஒருவரும், 34 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews