எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு…..!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படங்களுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்று யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிபதி J.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த ஜனவரி மாதம் 8 படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கில் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தனர்.
எட்டு படகுகளின் உரிமையாளர்கள் சாட்சியமளிக்க வேண்டிய நிலையில், நான்கு படகுகளில் உரிமையாளர்களே நேரடியாக மன்றில் ஆஜராகி சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
இதன்போது ஒரு  உரிமையாளர் வழக்குக்கு முன்னிலை ஆகியிருக்கவில்லை. அத்துடன் மூன்று படகுகளில் உரிமையாளர்கள் தமக்குப் பதிலாக வேறு நபர்களை அனுப்பி இருந்ததன் காரணமாக நீதிமன்றம் குறித்த மூன்று படகுகளுக்கான மூன்றாம் நபரின் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற எட்டுப் படகுகளின் வழக்கில் 4 படகுகளை விடுவித்து கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளதுடன் 4 படகுகள் அரசுடமையாக்கி கட்டளை பிறப்பித்திருந்தது.
மேலும் 6 புதிய படகுகளுக்கான வழக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. . இதன்போது நான்கு படகுகளுக்கான உரிமையாளர்கள் மன்றில் சமூகமளிக்காமையினால் 4 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டு கட்டளையிடப்பட்டுள்ளது.
இரண்டு படகுகளில் உரிமையாளர்களின் வாக்குமூலங்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு கட்டளைக்காக தவணை இடப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற வழக்கில் 14 படகுகளுக்கான வழக்குகள் இடம்பெற்றது.  இதன்போது 4 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு படகுகள் அரசுடைமையாக்கப்பட்ட கட்டளையிடப்பட்டுள்ளது.
 அத்துடன் இரண்டு படகுகளுக்கான கட்டளைக்காக எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளது.
நேற்று விடுவிக்கப்பட்ட நான்கு படகுகளும், இலங்கை கடற்பரப்பில் வைத்து பராமரிக்கப்பட்டு அதற்கான பராமரிப்பு செலவாக 129500 ரூபாவும், இரண்டாவது படகுக்கு 54500/= ரூபாவும், மூன்றாம் மற்றும் நான்காம் படகுகளுக்கு தலா 1480000/= ரூபாவும் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்குத் தொடுனர் மற்றும் எதிராளிகள் கட்டளை தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் மேன் முறையீட்டைச் செய்து கொள்ள முடியும் எனவும் மன்று பரிந்துரைத்தது.
மேன்முறையீட்டுக் காலம் வரை படகுகள் எடுத்துச் செல்ல முடியாது எனவும், மேன்முறையீட்டின் பின்னர் படகினை எடுத்துச் செல்ல முடியும் என்றும் ஊற்காவற்றுறை நீதிமன்ற நீதவான் J.கஜதிதிபாலன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews