வவுனியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.

வவுனியா, நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (22.02.2023) மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா மடாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்களை ஆதரித்து கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜீவ சேனசிங்க, சுமதிபால, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர் உமா சந்திர பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews