தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கவும் – பஸ் உரிமையாளர் சங்கம் –

பொது முடக்கத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள தனியார் பஸ்களின் சாதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நிவாரணப்பொதிகள் அல்லது நிவராணப்பணம் வழங்க வேண்டும் என்று, ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணப்பணம் வழங்கும் திட்டத்தில் பஸ் சாரதிகள், நடத்துநரகள்; முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனியார் தொழிற்றுறை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தனியார் பஸ் பயணிகள் போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் நாட்சம்பளத்தைப் பெற்று குடும்பச்செலவை கொண்டு நடத்திய சாரதிகள், நடத்துநர்களும் அதேபோல நாளாந்த வருவாயில் வாழ்க்கையைக் கொண்டு செல்லும் ஓட்டோ ஓட்டுநர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான ஹட்டன் நகரிலிருந்து தூர குருந்தூர சேவையில் சுமார் 200 தனியார் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன. இந்தப் பயணிகள் பஸ் சேவையில் 500 பேர் வரை சாரதிகளாகவும் நடத்துநர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கொரோனா பொதுமுடக்கத்தில் தமது நாளாந்த வருமானத்தை இழந்துள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவரணப்பொதிகள் அல்லது நிவாரணப்பணம் வழங்க வேண்டும்.

தற்போது பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும் 2,000 ரூபாய் நிவரணப்பணம் வழங்களில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews