கொரோனா 5ம் அலையை தடுக்க முடியாது! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.. |

நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறினால் 5வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அவ்வாறான சூழ்நிலையில்  நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் எடுக்கும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் புதிய பிறழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்பு

சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எப்போதும் உள்ளது என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு இந்த நிலையை எதிர்கொள்ள தயாராகவிட்டால் மக்களிற்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews