போதைப்பொருளை கட்டுப்படுத்த அதிரடி தீர்மானம்!

போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews