மட்டக்களப்பில் வரிச் கொள்கைக்கு எதிராக வங்கி வைத்தியசாலை பல்கலைக்கழ உத்தியோகத்தர் ஆர்பாட்டம்

அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வியாழக்கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தல் நிறைவேற்றபட்ட வரிக் கொள்கையை எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து  காந்திபூங்காவிற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட  உத்தியோகத்தர்கள் ஒன்று திரண்டனர்

இதில் வானுயரும் வரிச்சுமை நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள், நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுனர்களுக்கு வரிச்சுமை, வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும். போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்புp ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews