எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப,நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் மூலம் 6.29 ரூபா இலாபமாக கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 30 சென்ட் நட்டத்தையும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 10.3 ரூபா இலாபத்தையும் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டேன் 92 லீற்றர் பெட்ரோல், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெம்ரோல், லங்கா ஆட்டோ டீசல் லீற்றர் மற்றும் லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றிற்கு முறையே 80.46 ரூபா, 102.9 ரூபா, 59.5 ரூபா மற்றும் 87.2 ரூபா என அரசாங்கம் வரி அறவிடுவதாகவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews